மகளை கொலை செய்த தந்தை; மரண தன்டனை விதித்த நீதிமன்றம்!

மகளை கொலை செய்த தந்தை; மரண தன்டனை விதித்த நீதிமன்றம்!

மகளை கொலை செய்த தந்தை ஒருவருக்கு நுவரெலிய மேல் நீதிமன்ற நீதிபதி பிரமிர ரத்னாயக்க மரண தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலிய, ராகல பகுதியை சேர்ந்த 41 வதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2014.10.24 ஆம் திகதி இரவு தன்னுடைய மூன்றரை வயது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளின் மனைவி குவைட் நாட்டில் வேலை செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு சென்றுள்ளதுடன் அவர் இந்நாட்டில் வேறு ஒரு இளைஞருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை அறிந்த கணவன் மனவிரக்தி காரணமாக தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post