தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
$ads={1}
தான் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியதுடன் அந்த கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது.
$ads={2}
எவ்வாறாயினும் கடந்த பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 6 பேர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.