சாமர்த்தியமாக விமான நிலைய அதிகாரியினை ஏமாற்ற நினைத்த யுவதி கைது!

சாமர்த்தியமாக விமான நிலைய அதிகாரியினை ஏமாற்ற நினைத்த யுவதி கைது!

சட்டவிரோதமான இத்தாலி செல்ல முயற்சித்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி விசா தயாரித்து கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி செல்ல முயற்சி இலங்கையை சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
$ads={2}

அவர் 19 வயதுடைய சிலாபம், கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த யுவதி இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குசென்றுள்ளார்.
$ads={1}

விமான நிலைய டிக்கட் கவுன்டரிற்கு வந்த குறித்த பெண், சமர்ப்பித்த இத்தாலி விசா தொடர்பில் சந்தேம் ஏற்பட்டுள்ளது. அதற்கமையமேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை போலியானதென தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி இத்தாலியில் தங்கியிருக்கும் பெண்ணின் விசா தகவல்களை பயன்படுத்தி அவரது புகைப்படத்தை மாத்திரம்உள்ளடக்கி விசா தயாரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.