கஞ்சிபானை இம்ரானை வணங்கிய நபர் மீது விசாரணை !

பூசா சிறைச்சாலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் விற்பனையாளரான கஞ்சிபானை இம்ரானை, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வணங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று தனக்குகிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
$ads={1}

சிறைச்சாலை அதிகாரி உண்மையில் காஞ்சிபானை இம்ரானை வணங்கினாரா என்பதைக் கண்டறிய விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் முறையான வகையில் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
$ads={2}

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளாகியுள்ள சிறைக் காவலரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வவுனியா சிறைக்கு மாற்றநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் போது வெளிவரும் தகவல்களின்படி, குறித்த சிறைச்சாலை அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post