நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பானது வழமைக்கு திரும்புவதற்கு
சுமார் 2 மணிநேரம் (மாலை 5.30 மணி) வரையில் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ்
அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது குறித்த மின் வழங்கலில்
ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள்
ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.