ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாமல் செய்தனர் - சந்திரிக்கா ஆதங்கம்!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாமல் செய்தனர் - சந்திரிக்கா ஆதங்கம்!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்து உள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


$ads={1}

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தாலும் 2/3 பெரும்பான்மையை பெறுவதற்கான முக்கிய காரணம் ஜே.ஆரின் அரசியல் அமைப்பு ஆகும். இன்னொரு காரணம் பலவீமான கட்சிகளின் எதிர்ப்பு.

இரண்டு முக்கிய கட்சிகள் தற்போது அழிக்கப்பட்டு உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி துண்டு துண்டாக உள்ளது. இந்த நாட்டின் இரு பிரதான கட்சிகளும் உடைந்து போய் உள்ளன.

எதிர்கட்சியில் வலுவான தலைவர்கள் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிக்கு குறைந்த வாக்குகள் கிடைத்தது தொடர்பில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. இருப்பினும் விகிதாசார பிரதிநித்துவ முறை இருந்து இருந்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கக்கூடும்.


$ads={2}

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவிதி தொடர்பில் நான் கவலைப்படுகின்றேன். இது எனது தாயாரால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. மகிந்தவினால் கட்சியின் அழிவு நுட்பமாக மேற்கொள்ளப்பட்டது. சிறிசேன அதனை மிகவும் இழிவான முறையில் செய்தார். எங்கள் கட்சியை விட முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட பொதுஜன பெரமுனவுடன் நாங்கள் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றார் அவர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post