மாணவர்களுக்கான சீருடை வவுசர்கள் செல்லுபடியாகும் திகதி அறிவிப்பு!

மாணவர்களுக்கான சீருடை வவுசர்கள் செல்லுபடியாகும் திகதி அறிவிப்பு!

சகல அரசு பாடசாலைகளிலும் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை பாடசாலை சீருடை வவுச்சர்கள் செல்லுப்படியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட வவுச்சர்கள் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு வவுச்சர்கள் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post