சுமார் 100 அடி மரத்தின் உச்சியில் ஏறி போராடிய பெண்! பலங்கொட பகுதியில் சம்பவம்!

சுமார் 100 அடி மரத்தின் உச்சியில் ஏறி போராடிய பெண்! பலங்கொட பகுதியில் சம்பவம்!

இரத்தினபுரி மாவட்டம் பலங்கொட பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள பாரிய மரமொன்றில் 100 அடிக்கு மேல் ஏறி பெண் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றார்.

தியவின்த ஹந்தகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தாயான இவர், தற்போது குடியிருக்கும் இடத்தை தனக்கு சட்டரீதியாக உரிமம் வழங்க வேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.

எவ்வாறாயினும் இந்த காணி விவகாரம் குறித்து பலங்கொட நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக பிரதேச செலயகம் குறிப்பிடுகிறது.

இதனால் வேறு இடமொன்றை அவருக்கு வழங்க பிரதேச செயலகம் யோசனை முன்வைத்ததையும் அந்தப் பெண் நிராகரித்திருக்கின்றார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post