
ரணில் விக்ரமசிங்கவினால் சஜித் பிரேமதாஸவை கைது செய்வதற்கு நீண்ட திட்டமிடலுடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கபே அமைப்பின் முன்னாள் பிரதானியான கீர்த்தி தென்னகோன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அடுத்து வரும் நாட்களில் எந்தவொரு அரசியல்வாதியையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.