
இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரசாரங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சமூக ஊடக பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் 1 லட்சம் 50 ஆயிரம் டொலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை வேட்பாளர்கள் தமது சமூக ஊடக பிரசாரங்களுக்காக 359,795 டொலர்களை செலவிட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.