சிகரட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!! ஏன்?

சிகரட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!! ஏன்?

கொரோனா தொற்றால் இலங்கையில் சிகரெட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2020 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இலங்கை புகையிலை நிறுவனத்தின், நடவடிக்கைகள் மற்றும் தேசியநுகர்வோரின் தனிப்பட்ட பொருளாதாரங்கள் ஆகியவை கொவிட் - 19 தொற்றின் தாக்கத்தால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={1}

இலங்கையில் முடக்கப்பட்டிருந்த வணிக நடவடிக்கைகள் மே மாதம் நடுப்பகுதியில் இருந்து படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது.

இதன் விளைவாக, நிறுவனத்தின் வருவாய் ஹலால் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் மற்றும் பிற வரிகள் உள்ளடங்கலாக ரூபாய்24.1 பில்லியன் ஆக கிடைக்கபெற்றது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் வருமானம் 33% ஆக குறைவடைந்துள்ளது.
$ads={2}

கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான நிறுவனத்தின் இலாபம் ரூபாய் 3.1 பில்லியனாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 34% குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post