மட்டக்களப்பில் தொடர் மோதல்; பலர் படுகாயம்; வீடுகள் எரிப்பு!

மட்டக்களப்பில் தொடர் மோதல்; பலர் படுகாயம்; வீடுகள் எரிப்பு!

மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இரு நாட்களாக தொடரும் மோதலில் ஒருவர் போத்தல் குத்துக்கு இலக்காகி படுகாயம் இரு வீடு தீயிட்டு எரிப்பு ஒரு வீடு அடித்து சேதமாக்கப்படதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று (18) நள்ளிரவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

$ads={1}

நாவற்குடா இசை நடனக் கல்லூரி வீதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வந்த மோதலின் எதிரொலியாக சம்பவதினமான திங்கட்கிழமை (17) இரவு மின்சாரம் நாடு பூராக துண்டிபட்ட நிலையில ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு மற்றைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு சண்டை ஏற்பட்டதையடுத்து வீட்டிற்கு சென்று தகராற்றில் ஈடுபட்ட சுதாகர் என்பவர் மீது அங்கிருந்தவர்கள் போத்தலால் அவரின் கழுத்தில் குத்தப்பட்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில்; மட்டு போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


$ads={2}

இதனையடுத்து போத்தல் குத்துக்கு இலக்காகிய சுதாகரின் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் போத்தலால் குத்திய குழவினர்களின் அருகருகே உள்ள உறவினர்களின் இரு வீட்டிற்கு சென்று வீட்டிற்கு தீவைத்ததுடன் ஒரு வீட்டை அடித்து சேதமாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் இரு வீடுகள் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் எவ்விதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளனர். இதணையடுத்து தீயணைப்பு படையினர் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந் நிலையில் வீடுகள் எரிந்து சேதமாக்கப்பட்டவர்கள் இன்று காலையில் அவர்களது வீட்டின் பகுதியில் இருந்தபோது வீடுகளுக்கு தீவைத்த குழவினர் மீண்டும் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டனர். மதுபோதையில் ஒரே வீதியைச் சோர்ந்த இந்த இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்தணையடுத்து போத்தலால் குத்திய சம்பவம் தொடர்பாக ஒருவரையும் இன்று மீண்டும் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் உட்பட் இருவரை கைது செய்துள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.தகவல்: தினக்குரல்
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post