முகப்புத்தக போதைப்பொருள் களியாட்டம்; 6 பெண்கள் உட்பட 16 பேர் கைது!

முகப்புத்தக போதைப்பொருள் களியாட்டம்; 6 பெண்கள் உட்பட 16 பேர் கைது!

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராம - கிரிந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 6 யுவதிகள் மற்றும் 10 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) இரவு கிரிந்த பொலிஸாருக்கு கிடைத்த துப்பின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் யுவதிகள் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post