இச்சமயத்தில் அபிவிருத்தியை விட நம் மக்களின் பாதுகாப்பே அதி முக்கியம் - ரிஷாட் பதியுத்தீன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இச்சமயத்தில் அபிவிருத்தியை விட நம் மக்களின் பாதுகாப்பே அதி முக்கியம் - ரிஷாட் பதியுத்தீன்

எமக்கு அபிவிருத்தியை விட எமது சமுதாயத்தின் தன்மானம், எமது சமுதாயத்தின் இருப்பு, எமது சமுதாயத்தின் பாதுகாப்பு, எமது வரலாற்று சந்ததியின் எதிர்காலம் தான் முக்கியம் என்பதை முதலிலே நாங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன்தெரிவித்துள்ளார்.

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.

$ads={1}

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஸ்டங்களை கொடுக்க முடியுமோ அவ்வளவு கஸ்டங்களை இந்த தேர்தலில் எனக்கு தந்தார்கள். 4 மாதத்திற்கு முன்னர் என்னுடைய சகோதரரை கைது செய்தார்கள்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரை அடைத்து வைத்துள்ளார்கள். 3 மாதம் முடிய மீண்டும் 3 மாதம் அடைத்துள்ளார்கள்.

என் மீது இல்லாத பொல்லாத நினைத்தும் கூட பார்க்காத குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிஐடிக்கு வர சொன்னார்கள். குடும்பத்தினைரை இம்சைப்படுத்தினார்கள்.

வன்னி மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அரசாங்க தரப்பில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தலுக்கு மட்டுமே வந்தார்கள். பல கோடிகளை கொட்டினார்கள்.
$ads={1}

என் மீதான இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். ஆனால் மக்கள் அதனை நிராகரித்து எம்மை தெரிவு செய்தார்கள். இந்த ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருந்து இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் வெல்லக்கூட முடியாது என்றார்கள். இவற்றை தாண்டித்தான் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள்.

ஒரு போதும் உங்களுடைய தியாகம், முயற்சி, நம்பிக்கை வீண் போகாது. வீண் போக விடவும் மாட்டேன். கடந்த இரண்டு தசாப்தமாக அரசியலில் நாம் இருக்கின்றோம்.

மிக அமைதியாக நோக்க மிட்டுக் கொண்டிருக்கின்றோம். எமக்கு அபிவிருத்தியை விட எமது சமுதாயத்தின் தன்மானம், எமது சமுதாயத்தின் இருப்பு, எமது சமுதாயத்தின் பாதுகாப்பு, எமது வரலாற்று சந்ததி உடைய எதிர்காலம் தான் முக்கியம் என்பதை முதலிலே நாங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை பார்க்க வேண்டும். எனவே யாரும் கலங்க தேவையில்லை.

அவற்றை அடைவதற்கான அரசியல் பாதையை வகுத்து செயற்படுவோம். எமக்கு தேசியப்பட்டியில் ஒரு ஆசனம் தருவதாக சஜித்பிரேமதாச அணியினர் கூறியிருந்தார்கள்.

இருந்தாலும் கடைசி நேரத்தில் அவர்களுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் எம்மை அழைத்துஎமது கட்சி ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விட்டுத் தாருங்கள் என்றார்கள்.

இதனால் அதில் இருந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து நாம் மென்மைப் போக்கை கடைப்பிடடித்துள்ளோம்.

$ads={2}

எதிர்காலத்தில் இந்த சிறுபான்மை சமூகம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய தேவையை உணர்கின்றேன்.

அவர்வாறு பயணிக்கும் போது தான் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்ரப், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ஆகியோரும், கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.