காதல் விவகாரத்தால் பெண்ணொருவர் குத்திக்கொலை! குருநாகல் பகுதியில் சம்பவம்!

காதல் விவகாரத்தால் பெண்ணொருவர் குத்திக்கொலை! குருநாகல் பகுதியில் சம்பவம்!

காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இளைஞன் ஒருவர் தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று குருநாகல் - தும்மலசூரிய பகுதியில் பதிவாகியுள்ளது.

பின்னர் குறித்த நபர் விஷம் அருந்தியுள்ள நிலையில், அவரை சிலாபம் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதி 22 வயதுடைய மாதம்பே - தும்மலசூரிய பகுதியில் வசித்து வந்துள்ளதோடு இவர் தொழிற்சாலையொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட யுவதிக்கும், கொலை செய்த சந்தேக நபருக்கும் இடையே நீண்டகாலமாக காதல் தொடர்பு இருந்து வந்துள்ள நிலையில், இதற்கு யுவதியின் வீட்டில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த யுவதி அவரது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயமடைந்த குறித்த யுவதி சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தும்மலசூரிய பகுதியில் வசித்து வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post