தரம் 10 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலை நேர மாற்றம்!

தரம் 10 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலை நேர மாற்றம்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளுக்கான நேரம் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்புகின்றது.

அதன்படி, தரம் 10, 11, 12, 13 வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் காலை 7.30 மணி முதல் மாலை 1.30 மணிவரை என வழமையான நேரத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு சகல மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள், சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய சகல பாடசாலைகளினதும் 10, 11, 12 மற்றும் 13 வகுப்புகளுக்கு ஓகஸ்ட் மாதம் இறுதி வரை மட்டும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.