டிப்பர் மோதி ஐவர் பலி - சம்பவம் குருணாகலையில்

டிப்பர் மோதி ஐவர் பலி - சம்பவம் குருணாகலையில்

குருணாகலை, அலவ்வ வீதியில் வலகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


$ads={1}

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் சிறிய ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்று சென்று விட்டு, சிறிய ரக காரில் வீடு திரும்பும் வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post