இலங்கையில் பெரும்பாலானோரின் உடம்பில் ஈயம் கலப்பு!!!!

இலங்கையில் பெரும்பாலானோரின் உடம்பில் ஈயம் கலப்பு!!!!

அனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களின் இரத்தத்தில் டெசி லீட்டர் ஒன்றிற்கு 3 - 9 மைக்ரோ கிராம் அளவு ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={1}
இந்தப் பகுதி மக்களுக்கு நரம்பியல் கோளாறுகள், சிறுநீரக செயற்பாட்டில் தடை ஏற்படுதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈயம் இரத்தத்தில் உள்ளமையினால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி மட்டம் குறைவடைவதாக உறுதியாகியுள்ளது.
$ads={2}
உணவு மற்றும் குடிக்கும் நீரில் ஈயம் உள்ளமையினால் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் கிராமிய பகுதிகள் சிலவற்றில் தெரிவு செய்யப்பட்ட சிலரிடம் மேற்கொள்ள பரிசோதனையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post