மஹேல தலைமையில் புதிய தேசிய விளையாட்டு கவுன்சில் நியமனம்!

மஹேல தலைமையில் புதிய தேசிய விளையாட்டு கவுன்சில் நியமனம்!

தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்‌ மற்றும்‌ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிராமிய மற்றும்‌ பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்‌ தேனுக விதானகமகே ஆகியோர் இணைந்து நியமித்துள்ள இச்சபையின் அங்கத்தவர்களாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு தொடர்பான கொள்கை விடயங்களில், விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தேசிய விளையாட்டு கவுன்சிலானது செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சபையின் ஏனைய உறுப்பினர்களாக, ஜூலியன் போலிங், குமார் சங்கக்கார, டிலந்த மாலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெனாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ராஜித அபேமொஹொட்டி, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ரொவேனா சமரசிங்க. யஸ்வந்த முத்தேதுவகமக, ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய, தியூமி அபேசிங்க போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post