குரங்குகளின் எண்ணிக்கை இருமடங்காகி விட்டன! முன்னால் ஜனாதிபதி மைத்திரி கவலை!

குரங்குகளின் எண்ணிக்கை இருமடங்காகி விட்டன! முன்னால் ஜனாதிபதி மைத்திரி கவலை!

இலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, நாட்டில் பயிர்கள் விலங்குகளால் அழிக்கப்படும் ஒரு தீவிர பிரச்சினையை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஒரு காயினை மட்டும் பறிக்க முயற்சிப்பதன் மூலம் குரங்குகள் முழு தேங்காய் மரங்களையும் சேதப்படுத்துவதாக சிரிசேன குறிப்பிட்டார். அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது இலங்கையில் சுமார் 1 மில்லியன் குரங்குகள் இருந்தன என்று தெரிவித்தார்.

இருப்பினும், இன்று குரங்குகளின் எண்ணிக்கை 2 மடங்குக்கும் அதிகமானதாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

நாட்டில் அதிகமான தேங்காய் மரங்களை குரங்குகள் அழித்து வருவதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும், இலங்கை ஒரு பௌத்த நாடாக இருப்பதால் விலங்குகளுக்கு தீங்கு விலைவிப்பதில்லை என்றும், அத்தகைய செயலை எதிர்க்கும் விலங்கு உரிமைகள் குழுக்கள் இந்நாட்டில் உள்ளன என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.

மனித நுகர்வுக்காக வளர்க்கப்படும் உணவுக்கு மாறாக விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் ஒரே நாடு இலங்கை மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post