Update: லெபனான் பாரிய வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் வரை பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Update: லெபனான் பாரிய வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் வரை பலி!

லெபனான் - பெய்ரூட்டில் நிகழ்ந்த பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 4,000 பேர் படுகாயமடைந்தனர்.

பெய்ரூட் நகரின் கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த Ammonium Nitrate எனும் வெடிபொருள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உள்ள இதர கட்டடங்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.

பெய்ரூட்டிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சைப்ரஸ் (Cyprus) தீவு வரை வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளாக 2,750 டன் Ammonium nitrate, கிடங்கு ஒன்றில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று லெபனான் ஜனாதிபதி மிஷெல் எயுவன் (Michel Aoun) கூறினார்.

லெபனானில் நாளைய தினத்தைத் துக்கம் அனுசரிக்கும் நாளாக அவர் அறிவித்தார்.

லெபனான் பிரதமர் ஹசான் டியப் (Hassan Diab), வெடிப்புச் சம்பவத்தை ஒரு பேரிடர் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொன்னார்.

கிடங்கில் இருந்த Ammonium nitrate எப்படி வெடித்தது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.