தீவிரமாக உக்கிரமடையும் கொரோனா - இலங்கையின் உதவியை நாடும் இந்தியா

தீவிரமாக உக்கிரமடையும் கொரோனா - இலங்கையின் உதவியை நாடும் இந்தியா

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வைத்தியர் எலியந்த வைட் என்பவரின் உதவியை பெறுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த தீர்மானத்திற்கமைய அவரை அழைத்து செல்வதற்காக முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட விசேட விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


$ads={1}

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியுடன் இந்தியாவிற்கு தேவையான ஆதரவினை வழங்குவதற்காக வைத்தியர் எலியந்த வைட் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியர் எலியந்த வைட் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் பல்வேறு சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமான கடத்தில் உள்ளதாகவும் அவரை இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்காக சட்டத்திட்டங்கள் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


$ads={2}

இலங்கை வரவுள்ள இந்திய விசேட விமானத்தில் வைத்தியர் எலியந்தவை இந்தியாவிற்கு அழைத்து சென்று அந்த விமானத்தில் இருந்தே இந்திய அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post