இணையத்தில் வைரலாகும் அவுஸ்திரேலிய பிரதமரின் இலங்கை உணவு!

இணையத்தில் வைரலாகும் அவுஸ்திரேலிய பிரதமரின் இலங்கை உணவு!

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது சமையல் கலையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை உணவுகளைதயாரித்துள்ளார்.

அதனை தயாரித்த பின்னர் அது தொடர்பான பதிவு ஒன்றையும் அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
$ads={2}

இராப்போசனத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்பான புகைப்படங்களை அவுஸ்திரேலிய பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
$ads={1}

அதற்கு "Curry night" எனவும் பெயர் வைத்துள்ளார். அதனை தனது குடும்பத்தினர் மிகவும் விரும்பியதாக அவர் குறிப்பிட்டதுடன், ஆட்க்கறி பிரட்டல் மற்றும் கோதுமை ரொட்டி தயாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் அதிகரித்துள்ளமையினால் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமெல்பேர்ன் நகரத்தில் வாழும் அனைவருக்கும் தனது வாழ்த்தினையும் அவுஸ்திரேலிய பிரதமர் வெளியிட்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post