
துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்காக ஆவணங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஷானி அபேசேகர என்ற அதிகாரியின் மிகத் திறமையான விசாரணைகள் காரணமாக எனது தந்தையின் கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்க முடிந்தது. அவரது கைதின் பின்னணியிலும் பெரிய கதைகள் உள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஆட்சி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பொது மன்னிப்பை வழங்குவார் என்பது 100 வீதம் உறுதியானது. இது தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்படவில்லை என்றால், ஜனாதிபதி அது பொய் என பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.
ஜனாதிபதிக்கும் துமிந்த சில்வாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவரது சகோதரரின் தொலைக்காட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக அதிசயமான அர்ப்பணிப்பை செய்தது.
அது குறித்து எனக்கு எந்த கோபமும் இல்லை. தொடர்ந்தும் இது எனது தனிப்பட்ட பிரச்சினையல்ல. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது எனக்கு அழுகை வந்தது. நாங்கள் 5 ஆண்டுகள் அனுபவித்த துயரத்தை துமிந்த சில்வாவின் பெற்றோர்களின் கண்களில் பார்த்தே இதற்கு காரணம்.
69 லட்சம் வாக்குகளை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்பு இதுவாக இருந்தால், ஜனாதிபதி அதனை செய்யலாம். 69 லட்சம் மக்களுக்கு ஒழுக்காமான நாடு தேவைப்பட்டது. தான் செய்ய போவது சரியா என்பதை மக்களிடம் கேட்குமாறு ஜனாதிபதியிடம் கோருகிறேன்.
நாட்டின் சட்டத்தை மிதித்து போடும் செயலையே நீங்கள் செய்ய போகிறீர்கள். ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மேலும் சிலருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என்பதையும் நாங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறோம் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.