இலங்கையில் விமான நிலையத்தை மீள் திறப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை!

இலங்கையில் விமான நிலையத்தை மீள் திறப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளானவர்கள் அனைவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னரே குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்த அனைவரும் நாட்டிற்கு விரைவில் அழைத்து வரப்படுவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post