செப்டம்பரில் இலங்கை வரும் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர்! முழுத் தொகுப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரானதுஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
$ads={1}
இத் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினரும், பி.சி.பி.யின் உறுப்பினர்களும் செப்டெம்பர் 23 அல்லது 24 ஆம் திகதியன்று இலங்கை வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
$ads={2}
சுற்றுப்பயணத்தின் முதல் மூன்று வாரங்களுக்கான இரண்டு பயணக் குழுக்களின் செலவுகளைச் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்(பி.சி.பி) ஏற்றுள்ளது.

நாட்டுக்கு வருகை தரும் பி.சி.பி. உறுப்பினர்களும், வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் 14 நாட்கள்தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளனர்.

இதற்காக ஹோட்டல்களில் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கும் என்று பி.சி.பி. கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் அக்ரம் கான்உறுதிப்படுத்தினார். இவை அனைத்தும் கொழும்பில் நடக்கக்கூடும்.
$ads={1}
மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரையும் வாரியம் முன்மொழிந்துள்ளது, ஆனால் அது நடைபெற வாய்ப்பில்லை.

"மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உற்சாகமாக இருக்கிறது, ஆனால் அவர்கள் [வீரர்கள்] கடந்த ஐந்து அல்லது ஆறுமாதங்களில் விளையாடாததால் இது ஒரு கடினமான நேரமாக இருக்கும்" என்று அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post