பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை! அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை! அலி சப்ரி

முடிவு செய்தபடி, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திருத்தங்களை உடன் அமுலுக்குக் கொண்டு வருவதற்கான கால எல்லையொன்றினை என்னால் தெரிவிக்க முடியாது. என்றாலும் கட்டாயமாக அவசரமாக நாம் இதனை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் பற்றி என்னிடமும் சில கருத்துகள் உள்ளன. என்றாலும் அமைச்சரவையே அரசியல் கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக நான் 18 வயதுக்கு கீழான திருமணத்தை எதிர்க்கிறேன். இவ்வயதெல்லை எங்கும் பொதுவானதாகும். சவூதி அரேபியாவிலும் 18 வயதுக்குக் கீழான திருமணத்தை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளது. பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மலேசியாவில் பிரதம நீதியரசராக பெண் ஒருவரே கடமையாற்றுகிறார். குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படவேண்டியுள்ளது.

இதே வேளை மேலும் பல  விடயங்களை நாம் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டம் இதில் முக்கியமானது என்பதுடன் நீதித்துறை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டியுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்காகவே 20ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதேவேளை இதனால் 13ஆவது திருத்தத்திற்குப் பாதிப்பு ஏற்படாது.

நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதை ஒரு சில அடிப்படைவாதிகளே எதிர்க்கிறார்கள். பெளத்த அமைப்புக்கள் அல்ல. அவர்கள் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே. நான்  எப்போதும் தெரிவிப்பது என்னவென்றால் அடிப்படைவாதிகள் அனைத்துத் தரப்பிலும் இருக்கிறார்கள்.இலங்கை அனைத்து மக்களுக்குமான நாடாகும். அனைவரும் சமமாக கணிக்கப்பட வேண்டும். இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அமைச்சரவையில் நான் ஒருவனே முஸ்லிமாக இருக்கிறேன். இதே வேளை டக்ளஸ் தேவானந்தா மீன்பிடித்துறை அமைச்சராக அமைச்சரவையில் இருக்கிறார். நாமிருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சட்டத்துறையின் மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறையில் வழக்குகள் நீண்டகாலமாக தாமதிக்கப்படுகின்றமை என்பவற்றைக் கருத்திற்கொண்டே சட்டத்துறையில் அனுபவமுள்ள என்னை ஜனாதிபதி நீதியமைச்சராக நியமித்துள்ளார் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.