எனக்கு பாராளுமன்றம் செல்வதை விட வெளியிலிருந்து சேவை செய்வதே விருப்பம்!

எனக்கு பாராளுமன்றம் செல்வதை விட வெளியிலிருந்து சேவை செய்வதே விருப்பம்!

பாராளுமன்றம் உள்சென்று சேவை செய்வதைவிட வௌியில் இருந்து தற்போது பணிகளை முன்னெடுப்பது தனக்கு விருப்பம் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பசில் பாராளுமன்றத்திற்கு வந்து தமக்கு உரிய தலைமை வகிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

"பாராளுமன்றம் செல்வதை விட வௌியில் இருந்து செயற்படுவது நல்லதென நினைக்கிறேன்.  தேவை ஏற்பட்டால் நாட்டு மக்கள் கூறினால் செய்வேன். ஆனால் வௌியில் இருந்து செயற்படவே நான் அதிக விருப்பம்.

அரசியல் யாப்பை மாற்றி அமைக்கவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கினர். நாமும் அதற்கானவே ஆணை கோரினோம்.

எமக்கு 113 இருந்தால் போதுமானது ஆனால் மக்கள் 150 வழங்கியுள்ளனர். யாப்பை திருத்த அல்வது புதிய யாப்பை உருவாக்க மக்கள் மூன்றில் இரண்டு வழங்கியுள்ளனர். அதனை விரைவில் செயற்படுத்துவோம்." என தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post