391 பந்துகளில் 354 ஓட்டங்களை பெற்று பேசும் பொருளாக மாறிய தினேஷ்!

391 பந்துகளில் 354 ஓட்டங்களை பெற்று பேசும் பொருளாக மாறிய தினேஷ்!

கட்டுநாயக்க மைதானத்தில் தற்போது  இடம்பெற்று வரும் Super Eight - உள்நாட்டு  Premier League போட்டியில் நேற்று (25) ஆரம்பமான இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் - சரசென்ஸ் விளையாட்டு கழகத்துக்கு இடையிலான போட்டியில் இலங்கை இராணுவ விளையாட்டு கழக வீரரும் இலங்கை தேசிய அணியில் விளையாடுபவருமான தினேஷ் சந்திமால் 391 பந்துகளில் 354 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசி சமூக வலைகளில் கிரிக்கட் ரசிகர்களின் பேசுபொருளாகி உள்ளார்.

தினேஷ் சந்திமல் பெற்ற 354 ஓட்டங்கள் இலங்கையின் உள்நாட்டு பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக தனிநபர் பெற்ற அதிகூடிய ஊட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திமல் 391 பந்துகளில் 33 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 354 * அடித்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post