திட்டமிட்டு நடாத்தப்படும் குற்றச்செயல்கள் பாரிய அளவில் வீழ்ச்சி!

திட்டமிட்டு நடாத்தப்படும் குற்றச்செயல்கள் பாரிய அளவில் வீழ்ச்சி!

திட்டமிட்டு நடாத்தப்படும் குற்றச் செயல்கள் தற்போது பாரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் பாரிய சிக்கலாக இருந்த போதைப்பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல் மற்றும் பாதாள உலக குழு செயற்பாடுகள் பாரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதுவரையில் பாரிய வெற்றியடைந்துள்ளதாகவும் தொடர்ந்து அதனை கடைபிடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post