புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 எனவும் 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
மொஹமட் அலி சப்றி, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச ஆகியோரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
$ads={1}
அதேவேளை பிரதமர் மகிந்த ராஜக்ச நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். மகிந்த ராஜபக்ச களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.
$ads={2}
இதனையடுத்து கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அமைச்சரவை இதுவாகும்.