13ஆவது திருத்தம் குறித்து அமைச்சர்கள் எந்தவித கவனமும் செலுத்தவில்லை!

13ஆவது திருத்தம் குறித்து அமைச்சர்கள் எந்தவித கவனமும் செலுத்தவில்லை!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை திருத்துவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என கூறினார்.

புதிய அரசியலமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளின் போது மாற்றங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டை மீட்பது மற்றும் வருங்கால சந்ததியினரை துஷ்பிரயோகம் மற்றும் சிறுவயது திருமணங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post