VIDEO: பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது; ஹோமாகம பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது; ஹோமாகம பகுதியில் சம்பவம்!

ஹோமாகம பகுதியில் வீடொன்றின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 07 கை குண்டுகள், இரண்டு குண்டு துளைக்காத கவசங்கள், ஒரு துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போதே குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 7 கைக்குண்டுகள், துப்பாக்கி, 4 ரவைகள், குண்டு துளைக்காத கவசங்கள் இரண்டு மற்றும் 9 மில்லிமீற்றர் ரக 77 ரவைகள் மற்றும் இனங்காணப்படாத 4 ரவைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடானது அண்மையில் 12 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமாகம, பிட்டின பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரது கள்ளக்காதலிக்கு உரித்தானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.