ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கோரிக்கை நிராகரிப்பு!

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கோரிக்கை நிராகரிப்பு!

hejaz hizbullah
ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கடந்த 17ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தரைடச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றமையினால், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான தகைமை இல்லை எனக் காரணம் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post