தேசிய கல்வியியல் கல்லூரிகளின் (NCOE) கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் (NCOE) கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

national college of education sri lanka
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் (NCOE) இரண்டாம் வருட பயிலுனர்களின் 2017-2019 கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 07 ஆம் திகதி  முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெறும்.

அனைத்து ஆசிரியர் கல்லூரிகளினதும் முதலாம் இரண்டாம் வருட ஆசிரியர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 07 ஆம் திகதி முதல் நடைபெறும்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மூன்றாம் வருட (2016-2018) மாணவர்களின்
வெளிவாரி பயிற்சி பூரணப்படுத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இணைத்தல் ஜூலை மாதம் 07 ஆம் திகதி முதல் ஜூலை 31 வரை நடைபெறும்.

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தேசிய கல்வியியற் கல்லூரிகளின் இரண்டாம் வருட மாணவர்கள் 2017 -2019 பாடசாலை பயிற்சிக்காக  பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவர்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளின் முதலாம் வருட மாணவர்கள் (2018-2020) கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post