தனது 13 வயது குழந்தையை தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாய்; அக்கரைப்பற்றில் சம்பவம்!

தனது 13 வயது குழந்தையை தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாய்; அக்கரைப்பற்றில் சம்பவம்!

பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பெண் மற்றும் அவரது கள்ளக் காதலனை எதிர்வரும் ஜூலை 22 வரை தடுப்புக் காவலில் வைக்க திருகோணமலை மாவட்ட நீதிபதியும், அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் எம். எச். எம். ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

தனது சொந்த கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், குறித்த இந்தப் பெண் ஒரு தொழிலதிபருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த அந்த பெண்ணின் மகளை சுற்றுப்பயணம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, ஒரு ஹோட்டலில் இரண்டு தனித்தனி அறைகளை இரவு முழுவதும் முன்பதிவு செய்ததாக தெரிய வந்துள்ளது.


பின்னர் அவர் தனது 13 வயது குழந்தைக்கு போதைப்பொருள் செலுத்தி, தனது கள்ளக்காதலனுடன் பாலியல் உறவு கொள்ள தனது குழந்தையை தயார்படுத்தியுள்ளார்.

அதிஷ்டவசமாக சுயநினைவுக்கு திரும்பிய குறித்த குழந்தை, என்ன நடந்தது என்பதை உணர்ந்து தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அவருடைய தாய் மற்றும் அந்த இளைஞன், இந்த சம்பவம் வெளிவந்தால் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளை கூறி அக்குழந்தையை அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை குழந்தை உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்த அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post