இரு UNP வேட்பாளர்கள் கோட்டாபயவின் கட்சிக்கு தாவல்!

இரு UNP வேட்பாளர்கள் கோட்டாபயவின் கட்சிக்கு தாவல்!

மாத்தறை மாவட்டத்தில் இருந்து இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவிருந்த இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வேட்பாளர்கள் இன்று (10) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு தாவியுள்ளானர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போது அவ்விரு வேட்பாளர்களும் தமது ஆதரவை SLPP க்கு தெரிவித்தனர்.

SLPP வின் மாத்தறை மாவட்ட பிரதான வேட்பாளர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

மாத்தறை மாவட்டத்தில் இருந்து போட்டியிட UNP கட்சியிலிருந்து வேட்பு மனுக்களை சமர்ப்பித்த சந்தன பிரியந்த மற்றும் S. W பிரேமரத்ன என்பவர்களே இவ்வாறு SLPP க்கு கட்சி தாவியுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post