கண்டி மாணவனின் வயர்லஸ் ஸ்டெதாஸ்கோப்; ஜனாதிபதியிடம் கையளிப்பு!

கண்டி மாணவனின் வயர்லஸ் ஸ்டெதாஸ்கோப்; ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wireless Stethoscope Kandy
ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை கண்டி தளதா மாளிகைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ​​கண்டி திரித்துவக் கல்லூரியின் மாணவரான வேணுர விஜசேகர, தான் வடிவமைத்த வயர்லெஸ் ஸ்டெதாஸ்கோப்பை (Wireless Stethoscope) ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

இந்த ஸ்டெதாஸ்கோப்பின் சிறப்பம்சமாக, நோயாளியை நெருங்காமலே வைத்தியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

குறித்த இந்த ஸ்டெதாஸ்கோப்பினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஜனாதிபதி அவர்கள்  உபயோகித்தும் பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post