சிறைச்சாலை மாற்றக்கோரி கஞ்சிபான இம்ரான் மனுத்தாக்கல்!

சிறைச்சாலை மாற்றக்கோரி கஞ்சிபான இம்ரான் மனுத்தாக்கல்!

பூஸ்ஸ சிறைச்சாலையில் இருக்கும் நிலையில், தன்னை தென் மாகாணத்திற்கு வெளியில் உள்ள வேறு ஏதாவது ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாரு சிறைச்சாலை அதிகாரிகளிக்கு உத்தரவிடுமாறு கோரி பாதாள உலக குழு தலைவரான மொஹமட் வசீம் மொஹமட் இம்ரான் எனும் கஞ்சிபான இம்ரான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய, பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளடங்கலான ஒன்பது பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் காரணமாக தன்னால் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தன்னை தென் மாகாணத்திற்கு வெளியில் உள்ள வேறு ஏதாவது ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாரு உத்தரவிடுமாறு அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post