மக்களின் அன்றாட நடவடிக்கை குறித்து அதிருப்தி - அனில் ஜாசிங்க

மக்களின் அன்றாட நடவடிக்கை குறித்து அதிருப்தி - அனில் ஜாசிங்க

கந்தக்காடு இரண்டாவது சுற்று கொரோனா இல்லை என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுதுவெலவின் தொடர்ச்சியே இது என குறிப்பிட்டுள்ளார்.

கந்தக்காடு மூலம் பரவியுள்ள கொரோனா வைரசினை கட்டுப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள அவர் இது சவால்தான் ஆனால் முன்னர் நாங்கள் செய்தது போன்று இதனையும் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டை மீண்டும் திறந்த பின்னர் மக்களும் ஸ்தாபனங்களும் கொரோனா வைரசினை சாதாரணமாக கருதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொதுமக்களும் ஸ்தாபனங்களும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படைகளை கூட பின்பற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கான மக்களினதும் ஸ்தாபனங்களினதும் ஆர்வம் குறைகின்றதை அவதானிக்க முடிவதாக அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சில ஸ்தாபனங்களில் கைககளைகழுவுவதற்கான பொருட்களை காணமுடியவில்லை,சில ஸ்தாபனங்களில் தண்ணீரை காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் ஒன்றுகூடுகின்றனர்,அவர்கள் முகக்கசவசத்தினை கீழே இறக்கிவிடுவதுடன் அவ்வப்போது முகத்தை தொடுகின்றனர் என அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post