
வீட்டில் இருந்த 5 துப்பாக்கிகள், பாதியளவில் தயாரிக்கப்பட்டிருந்த துப்பாக்கி பாகங்கள், தோட்டாக்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதாள உலகக்குழுவினரின் பயன்பாடுகளுக்காக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

