
இருப்பினும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக தனிமைப்படுத்தல் மையங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஜூலை 15 முதல் மாலத்தீவிலிருந்து வந்த கடைசி விமானத்துடன் அனைத்து செயல்முறைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
நாட்டிற்கு மீள் அழைத்துவரும் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை வெகுசீக்கிரம் அமைக்க இராணுவத்துடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கித் தவிப்பவர்களை உடனடியாக மீள் அழைத்துவரும் பணிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும், ஏனெனில் வெளிநாடுகளில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு உதவ வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.' என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நான்கு தனித்தனி விமானங்களில் 52 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
துபாயில் இருந்து 04, கத்தாரிலிருந்து 14, சென்னையிலிருந்து 13 மற்றும் 21 என வெவ்வேறு இரு விமானங்களில் என்று மொத்தமாக 52 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

