மேலுமொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்! கொழும்பில் மீண்டும் பரபரப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்! கொழும்பில் மீண்டும் பரபரப்பு!

கொரோனா வைரஸ் தொற்றியவர் என சந்தேககிக்கப்படும் மற்றுமொரு நோயாளி கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இவர், வீடொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மத்தேகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த 22 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த நபருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும் வரை வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த நபர் கடந்த 23ஆம் திகதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நபரை கைது செய்யுமாறு அறிவித்து விசேட பொலிஸ் அறிக்கை ஒன்று நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினமும் ஒரு கொரோனா நோயாளி வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியமையை அடுத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் சமூக பரவலாகிவிடுமா என்ற அச்சம் அடைந்திருந்தபோதிலும் அவ்வாறில்லை என சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒருவர் தப்பியோடியதை அடுத்து அவருக்கும் கொரோனா என சந்தேகம் மேற்கொண்டதை அடுத்து இதனால் சமூகப் பரவல் ஆகிவிடுமோ என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளாதால் கொழும்பு பகுதி பரபரப்பு அடைந்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா நோயாளிகள் தங்கியிருக்கும் இடங்களில் இரட்டிப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தகக்து.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.