துருக்கியில் VIA TOWER எனும் அடுக்குமாடி கட்டிடத்தில் பாரிய தீ!

துருக்கியில் VIA TOWER எனும் அடுக்குமாடி கட்டிடத்தில் பாரிய தீ!

துருக்கியின் அங்காராவின் கங்கயா மாவட்டத்தில் உள்ள VIA TOWER இல் உள்ள வணிக மையத்தில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இன்று 2.30 GMT மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்திலிருந்து மக்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கட்டிடம் மேலிருந்து கீழ் வரை தீப்பிழம்புகளில் மூழ்கியிருப்பதாகத் தெரிகிறது.

உயிர் சேதம் தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post