பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள்; மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள்; மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானதில் கடந்த ஜூலை 11ஆம் திகதி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இருவரும் கடந்த 17ஆம் திகதி பாலிவுட் நடிகை ஐஸ்வர் ராய், அவரது மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

10 நாட்கள் அவர்கள் இருவருக்கும் பரிசோதனைகள் நடந்த நிலையில் ஐஸ்வர் ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post