வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு!

வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒருகோடி 63 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் திணைக்களத்துக்கு மொத்தமாக ஒரு கோடி 69 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் சுமார் 1.5 வீதமான  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் இருக்கின்றன.

அவை வாக்காளர்களின் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தபால் நிலையங்களில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதிவரை உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வேட்பாளர்களினால் தனிப்பட்ட ரீதியில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும்  தேர்தல் பிரசார பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post