தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு பெரும் திகதி அறிவிப்பு!

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு பெரும் திகதி அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஞாயிறு இரவு 10 மணியின் பின்னர், பிரச்சாரத்திற்கான பொறிமுறைகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் தினமான எதிர்வரும் 04ஆம் திகதி எந்த பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வௌியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post