இலங்கையில் இதுவரை சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை!

இலங்கையில் இதுவரை சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை!

இலங்கையில் 4 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று நோயால் வேலையை இழந்த நபர்களின் எண்ணிக்கையை அறிய கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி, வருமானம் மற்றும் கிருமிநாசினிகளுக்கான செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்கள் குறித்தும் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் கவனம் செலுத்தும்.

கணக்கெடுப்பை ஆகஸ்ட் 15ம் திகதிக்குள் நடத்தி முடிக்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், செப்டெம்பர் மாதத்திற்குள் அது பகிரங்கப்படுத்தப்படவும் உள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான வேலையின்மை குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே, இலங்கையில் தற்போது சுமார் 480,000 நபர்கள் வேலையில்லாமல் உள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post