மூத்த மனைவியை கொலை செய்த இளைய கணவன்!

மூத்த மனைவியை கொலை செய்த இளைய கணவன்!

கொழும்பு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (28) 10.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவரினால் அவரது மனைவி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இக்கொலையை புரிந்தார் எனக் கூறப்படும் 39 வயதுடைய கணவர், கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் 53 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை விசாரணையின் பின்னர் புறக்கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post