போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துளள்ளன.

இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 26 அதிகாரிகள் அடங்குவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அதிகளவான கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது தண்டனைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவுக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post